பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் தலைவர் அன்புமணிக்கும் இடையே அதிகார சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், கட்சியும் இரண்டுபட்டு இருக்கிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி பந்தாடி வருகின்றனர்.
அப்பா, மகன் இருவரும் தனித்தனியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். யார் பக்கம்நிற்பது என்ற குழப்பத்தில் சாதாரண தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.
இச்சூழலில், திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்த பாமக தொண்டர்கள், அப்பா- மகன் இருவரும் ஒன்று சேர வலியுறுத்தி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றனர்.